Saturday, September 4, 2010

AMAZING THAILAND II



மதிய உணவை முடித்துவிட்டு நான் உறங்கி மாலை 5 மணிக்கு எழுந்தேன்...ஹ்ம்ம் காபரே போக போறோம் நல்லா கம கமன்னு இருக்க வேண்டாமான்னு ஒரு பாட்டில் சென்ட் அடிச்சிக்கிட்டு, சும்மா சிக்குன்னு ஒரு டி-ஷர்ட், ஜீன் போட்டுக்கிட்டு....அய்யா வெயிட் பண்ணுங்க...மேலே சொன்னது என்னைப் பற்றி இல்லை என் 60 + ரூம் மேட் பற்றி...கிளம்பிட்டார். நமக்கு தான் கூகிள் பண்ணி அத்தனை விஷயமும் அத்துப்படி ஆச்சே...எல்லாம் ஒரு லிமிட் தான் என்று தெரியும்...எல்லோரும் கிளம்பி வந்து பஸ்சில் ஏறி உட்கார்ந்தாச்சு, ஆனா பஸ் இன்னும் கிளம்பலயே என்னடா மேட்டருன்னு பார்த்தா எப்பவுமே லேட்டா வர ஒருத்தர் இப்பவும் வரலையாம். அடப் பாவி இதுக்கு கூடவா லேட் பண்ணுவாங்க என்று நினைத்தேன்(அவர் லேட்க்கு காரணம் எனக்கு லேட்டா தான் தெரிஞ்சது, அது ஏன்னா...அது ரகசியம் பா)


சரி அவர் வர வரை இந்த அல்கசர் காபரே பற்றி சில தகவல்களை கொட்டுகிறேன் என்று மைக்கை பிடித்து நம்ம ஏஜென்ட் முருகன் ஆரம்பிக்க அவரின் லோக்கல் ஏஜென்ட் மைக்கல்(தாய் நாட்டவர் மிக இனிமையானவர்) எ பி சி டியை மாற்றி அமைத்து ஏதோ பேசி முடித்தார்(அதாங்க ஆங்கிலத்துல). அதற்குள் தலைவர் வந்து சேர அப்பாடா தப்பிச்சோம் என்று நினைத்தோம்.நம்ம ஆளுங்க மைக்கை பிடிச்சா போதும் அப்படியே என் உயிரினும் மேலான என்ற ரேஞ்சுக்கு ஆரம்பித்துவிடுகின்றனர்...சரி பஸ் கிளம்பியாச்சு யாரவது ஏதாவது டவுட் இருந்தா கேளுங்கப்பா என்று முருகன் பெரிய ஹெட் மாஸ்டர் ரேஞ்சுக்கு கேக்க ஒரு பெருசு கை தூக்கியது...என்ன டவுட் என்று கேக்க "இந்த காபரே எப்படி இருக்கும் பொம்பலயாளுவங்கலாம் கூட வராங்களே" என்றார்...முருகன் சூப்பர் பதில் சொன்னார் "நீங்க யாரெல்லாம் நம்ம லேட்டஸ்ட் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களை குடும்பத்துடன் அமர்ந்து பார்பீர்களோ அவங்களுக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை"


ஒரு வழியாய் ஷோ நடக்கும் ஆடிட்டோரியம் உள்ளே சென்று அமர்ந்தோம்...மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது...வந்த அனைவருக்கும் காம்ப்ளிமேண்டரியாக ஒரு க்ளாசில் பீர் அல்லது கூல் ட்ரிங்க்ஸ் என்று அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கப்பட்டது...ஹ்ம்ம் முதலில் புட்டி அப்புறம் குட்டியா என்றார் நம் நண்பர் ஒருவர் ஆர்வமிகுதியில்...நிகழ்ச்சி பற்றி நிஜத்தில் சொல்வதானால் இரண்டே வார்த்தை தான் "பிரம்மாண்டம் - பிரமிப்பு"...அந்த ஒரே ஸ்டேஜில் நிமிடத்திற்க்கொன்றாக எத்தனை செட்கள்...எத்தனை உடைகள்...எத்தனை கதைகள்...எத்தனை விதமான நடனங்கள்...எத்தனை பாடல்கள்(நம்ம ஹிந்தி பாடல் ஒன்றும் சேர்த்து)...காணக் கண் கோடி வேண்டும் என்பார்களே அது நிச்சயம் இங்கே பொருந்தும்...காபரே என்ற அலைந்துக் கொண்டு வந்தவர்களையும் ஏமாற்றக் கூடாது என்று இரண்டு நடனங்களில் சற்று அதிக கவர்ச்சியுடனும் ஒரு நடனத்தில் உடலில் பெயிண்ட் மட்டும் அடித்தும் ஆடி புண்ணியம் தேடிக் கொண்டனர்...


நிகழ்ச்சி முடிந்தவுடன் எல்லாரும் அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே ஓடினர்...என்னடா ஏதாவது பூகம்பம்,சுனாமி ஏதாவது வந்துடுச்சா என்று நினைத்துக் கொண்டே பார்த்தால் வெளியே பயங்கர கூட்டம்...அப்போ முருகன் "போங்க பார்த்தி போங்க அப்புறம் சான்ஸ் கிடைக்காது" என்று சொல்ல என்னடா யாராவது கீரி பாம்பு சண்டை விடுறாங்களா என்று எட்டிப் பார்த்தால் உள்ளே அந்த நடன மங்கைகளுடன் நின்று பலர் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்...அந்த பெண்கள் எல்லோர் கையிலும் நிறைய பணம்...ஒவ்வொருவரும் படம் எடுக்க நூறு பாத்(தாய் நாணயம்) கட்டணம் வாங்கிக் கொண்டிருந்தனர்...நம்ம கூட்டத்தின் தலைவர் "பார்த்தி போங்க போய் படம் எடுத்துக்கோங்கோ நாங்க  எல்லாம் மனைவியுடன் வந்திருக்கோம் நீங்களாவது நம்ம குரூப் மானத்த காப்பாத்துங்கோ" என்று ட்ராய் படத்தின் அக்கிலீசை அழைப்பதை போல கூப்பிட, நமக்கோ எவண்டா இதுக்கெல்லாம் நூறு பாத் செலவு செய்யறது என்ற நினைப்பு...அதற்குள் தோழர் ஒருவர் "அடுத்த ஷோவுக்கு அவங்க கிளம்பிடுவாங்க போங்க பார்த்தி" என்று உள்ளே தள்ளினார். சரி ஆனது ஆச்சு இருப்பதிலேயே நமக்கு பிடித்த ஒரு பொண்ணுகிட்டே போய் நின்று படம் எடுத்தேன்...அடுத்த ஷோவிற்கு ஓடுற அவசரத்துல என்னவோ நான் ஒரு ஒரு பாத்தாய் எண்ணி கொண்டு இருக்கும் போது இருக்கறதா குடுடா என்பது போல அவள் பார்க்க கையில் இருப்பதை கொடுத்தேன்...பின் நம் வரவு செலவு கணக்கை சரி பார்த்ததில் வெறும் முப்பது பாத் தான் கொடுத்தேன் என்று தெரிந்துக் கொண்டு பெருமிதம் அடைந்தேன்...பின்ன அந்த மொத்த குரூப்லையே நாம தானே கம்மி காச கொடுத்தோம்...கிழே உள்ள படத்த பார்த்தாலே தெரியும் நாமே எவ்வளோ தள்ளு முள்ளு குள்ள போய் எடுத்திருப்போமும்னு...


நம்ம ரூம் மேட் ரொம்ப அமைதியாய் இருந்தார் ஒரு ஏக்க பார்வை மட்டும் வீசினார்...என்ன சார் நீங்க எடுத்துக்கலையா என்று கேக்கலாம் என்று தான் நினைத்தேன்...ஆனா அவர் வயசு மற்றும் அதிக அறிமுகமின்மை காரணமாக அடக்கி வாசித்து விட்டேன்...அன்று ரூமுக்கு திரும்பிவிட்டு எல்லாரும் சாப்பிட ரெஸ்டாரன்ட் வந்தபோது என்னைப் பிடித்து இழுத்து ஓரமாக அழைத்து சென்றார் நம்ம லேட் பார்ட்டி...அட மறந்துடீங்களா அதாங்க பஸ் கிளம்பும்போதெல்லாம் லேட்டாவே வருவாருன்னு சொன்னேனே அவர் தான்...அந்த ஓரத்திலே ஜோடி இல்லாம வந்த ஆறு பேரு மினி மாநாடு...என்ன மேட்டருன்னு பார்த்தா.....மேட்டரு தான் ;-)

இதுக்கு அடுத்த பாகத்தை தயவுசெய்து பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளோரும், என்னை அண்ணன் தம்பி என்று நினைப்போரும்....குறிப்பாக லவ்வரும் படிக்க வேண்டாம் 

போன பாகத்தில் இந்த ஷோவை பற்றி ஒரு உண்மை சொல்றேன்னு சொன்னேன்ல...அது என்னனா இங்கே ஆடுற என்ன பெண்ணும் பிறவியிலேயே பெண் இல்லையாம்....இந்த மேட்டர பஸ்ல ரூமுக்கு திரும்பிவரும் போது தான் முருகன் சொன்னார்...நான் இந்த மேட்டர இப்போ தான் வெளியே சொல்றேன்...படிச்சிட்டு நம்ம பயளுங்கலாம் என்ன சார் இது என்று கேக்க போறாங்க...ஹ்ம்ம் எல்லா உண்மையும் ஒரு நாள் வெளியே வந்து தானே ஆகணும்....


தொடரும்...

0 comments:

Post a Comment